உன்னை கண்டால்!!❣️💕

நிலவும் தேய்ந்து போகும் உன்னை கண்டால்!

பூக்களும் உதிர்ந்து விடும் உன்னை கண்டால்!!

வெண் மேகமும் சிதைந்து விடும் உன்னை கண்டால்!!!

கண்களும் இமைக்க மறுக்கிறது உன்னை கண்டால்!!!!

உலகும் உறைந்து போகும் உன்னை கண்டால்!!!

ரோஜாக்களும் பொசுங்கிவிடும் உன் இதழ்களின் மென்மை கண்டால்!!!

வளறியும் தோற்றே போகும் உந்தன் புருவங்களை கண்டால் !!!

கண்களால் கைது செய்தாய் என்னை!!
    -ஞானம் கோவிந்தசாமி 

எல்லாம் உன்னிடத்தில் 💞❤️

எல்லாம் உன்னிடத்தில் 💞❤️
காதலை கண்டேன் உன்னிடத்தில் 💞

பாசத்தை உணர்ந்தேன் உன்னிடத்தில்!

கருணையைக் கண்டேன் உன்னிடத்தில் 💞❤️

கோபத்தின் உக்கிரத்தை கண்டேன் உன்னிடத்தில்...!

அன்பை காண வந்தேன் உன்னிடத்தில் 💞❤️

அரவணைப்பை உணர வந்தேன் உன்னிடத்தில்...!!

வாழ்க்கையை வாழ ஆசை பிறந்தது உன்னிடத்தில்...!!!

வாழ்வதற்கு ஆயுளும் போதாது உன்னிடத்தில் 💞❤️

என் மனம் முழுவதும் உன்னிடத்தில்!!!
என் காலம் முழுவதும் உன்னிடத்தில்!!!

மொத்தத்தில் என் எல்லாம் உன்னிடத்தில்.. உன்னிடம் மட்டும் தான்....!!!
    - ஞானம் கோவிந்தசாமி..

சிவகாமியின் சபதம் முதல் பாகம் :பரஞ்சோதி யாத்திரை

                                                   அத்தியாயம் :1 _ பிரயாணிகள் 
இளவேனிற் காலத்தில் ஒரு நாள் மாலையில் மகேந்திர ஏரிக்கரை வழியாக போகிற சாலையில் இருவர் காஞ்சி நகரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.அவர்களில் ஒருவர் ஆறடி உயரத்துக்கு  மேல் வளர்ந்திருந்த ஆஜானுபாகு ,காவி வஸ்திரம் தரித்த பௌத்த சந்நியாசி.கடுமையான தவ விரதங்களினாலோ,வேறு கடினமான காரியங்களில் ஈடுபட்டத்தினாலோ அந்த புத்த பிக்ஷுவின் தேகமானது வறண்டு கெட்டிப்பட்டுக் கடினமாயிருந்தது.அவரின் முகத்தோற்றமானது அன்பையோ பக்தியையோ உண்டாக்குவதில்லை,மாறாக ஒருவித பயத்தை ஊட்டியது.
இன்னொரு பயணி கட்டமைத்த தேகமும்,காலை பொருந்திய முகமும் உடைய பதினெட்டு வயது வாலிபன்.பயணிகள் இருவரும் வெகுதூரம் நடந்த களைப்பில் இருந்தனர்.
"தலைநகரம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது?" என்று வாலிபன் கேட்டான்.
"அதோ!" என்று பிக்ஷு கை காட்டிய பக்கம்,அடர்ந்த மரங்களுக்கு நடுவே மாளிகைகளின் கோபுரம் தெரிந்தது.அந்த வாலிபன் அதையே சற்று நேரம் பார்த்துகொண்டிருந்தான்.பின்னர் புத்த பிக்ஷுவை பார்த்து "இங்கிருந்து ஒரு நாழிகை தூரம் இருக்குமா?"என்று கேட்டான்.
"அவ்வளவு தான் இருக்கும் ".
"அப்படினா நான் சற்று உட்கார்ந்து விட்டு வருகிறேன்.அவசரமானால் நீங்க போங்க"என்று சொல்லி வாலிபன் கையிலிருந்த முட்டையையும் தடியையும் கீழே வைத்துவிட்டு ஏரியை பார்த்துக்கொண்டு உட்கார்ந்தான்.
பிக்ஷுவும் அவன் அருகில் மேற்கு திசையை பார்த்து உட்கார்ந்தார்.
அந்த ஏரியின் அழகையும்,பொன்வானம் நெருப்பை உமிழ்வது போன்ற நிறம் கொண்டு காட்சியளிக்கிறது,அங்கே மீனுக்காக தவம் செய்துகொண்டிருக்கும் வெண் நாரைகள்,எழில்மிகு மலைகளின் அழகையும் பார்த்து ரசித்தவாறு அந்த வாலிபன் மௌனமாக இருக்கிறான்.பின் தனக்கு தானே பேசிக்கொள்வது போல் "இந்த பிரமாண்ட ஏரியை மகேந்திர தடாகம் என்று சொல்வது பொருத்தம் இல்லை,மகேந்திர சமுத்திரம் என்று தான் இதை சொல்லவேண்டும்!"என்றான்.
சந்நியாசி ஏரியை நோக்கிய வண்ணம் ,"இந்த ஏரியில் இப்போது நீர் குறைவு.ஐப்பசி கார்த்திகையில் மழை பெய்து ஏரி நிரம்பியிருக்கும் போது பார்த்தால் அசந்து போவாய் !அப்போது நிஜ சமுத்திரம் போலவே இருக்கும்"என்று சொல்லிக்கொண்டு எழுந்தார்.
"புறப்பட்டு விட்டீர்களா சுவாமி ?"என்றான் வாலிபன்.
"ஆமாம் பரஞ்சோதி !என்னோடு வருவதற்கு உனக்கு இஷ்டம் இல்லை போல"என்று சொல்லிவிட்டு சந்நியாசி நடக்க தொடங்கினார்.
பரஞ்சோதியும் அவரை தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.சாலையில் போவோர் வருவோர் கூட்டம் அதிகமாயிருந்தது.சற்று தூரம் சென்றதும் மல்லிகை பூக்களின் வாசம் வந்தது.அதை நுகர்ந்ததும் "ஆஹா!"என்றான் வாலிபன்.அங்கே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நந்தவன பூக்கள் பூத்துச் சிரித்துக்கொண்டிருந்தன.
"இவ்வளவு பூக்களை என்னதான் செய்வார்கள் ?"என்று வாலிபன் கேட்டான்.
"இவற்றில் பாதி கோயில் தெய்வங்களுக்கு அர்ப்பணமாகும் ,மற்ற பாதி காஞ்சி நகரத்து பெண்களை அலங்கரிக்கும் ...அதோ!"என்று சட்டென்று நின்றார் சந்நியாசி.சர சரவென்று பாம்பு சாலையை கடந்தது."இந்த மல்லிகை மணத்திற்கு பாம்புகள் எங்கே என்று காத்திருக்கும்"என்றார் சந்நியாசி.
பாம்பு போனதும் மேலே நடந்தார்கள் மௌனமாக.பரஞ்சோதி சட்டென்று சிரித்தான்."எதை நினைத்து சிரிக்கிறாய்?"என்கிறார் சந்நியாசி.
பரஞ்சோதி சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு,"இல்லை அடிகளே!மத்தியானம் அந்தச் சர்பத்தை கொன்று என்னை காப்பாற்றினீர்களே?நீங்கள் புத்த பிக்ஷுவாயிற்றே ?ஜீவஹத்தி செய்யலாமா என்று நினைத்து சிரித்தேன் !"என்றான்.
"தன்னை கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம் அல்லவா?"என்றார் புத்த பிக்ஷு."ஆனால் பாம்பு தங்களை கொல்ல வரவில்லையே?என்னைத்தானே கொல்ல வந்தது?"என்றான் பரஞ்சோதி.
"என் சிஷ்யனை நான் காப்பாற்ற வேண்டாமா?"என்றார் பிக்ஷு.
"சிஷ்யனா ? யாரை சொன்னீர்கள் ?
"ஆமாம்,நீ என் உயிரை ஒரு சமயம் காப்பாற்றினாய்,அதற்கு பிரதியாக...
"உங்கள் உயிரை நான் காப்பாற்றினேனா! எப்போது ?
"முன்னூறு வருஷத்துக்கு முன்பு...
"என்ன!
"முன்னொரு ஜென்மத்தில்.
"ஓஹோ!தாங்கள் முக்காலமும் உணர்ந்த முனிவர் என்பது தெரியாமல் கேட்டுவிட்டேன் ,மன்னிக்க வேண்டும்.என்றான் வாலிபன்.சந்நியாசி மௌனமாக நடந்தார்.
மீண்டும் பரஞ்சோதி,"சுவாமி!இனி வரப்போகிறது கூட தங்கள் ஞான திருஷ்டியில் தெருமல்லவா?"என்று கேட்டான்."வரப்போகிறது ஒன்றை சொல்லட்டுமா?"என்றார் பிக்ஷு.வாலிபன் "சொல்லுங்கள் ".
"இந்த நாட்டுக்கு பெரிய யுத்தம் வரப்போகிறது!"
"பெரிய யுத்தமா?"
"ஆமாம் மகா பயங்கரமான யுத்தம் ,பாலாறு இரத்த ஆறாக ஓடப்போகிறது,மகேந்திர தடாகம் இரத்த தடகமாக மாறப்போகிறது".
"ஐயோ !பயமாயிருக்கிறது!போதும் அடிகளே!"சற்று பொறுத்து மீண்டும் பரஞ்சோதி "நாட்டின் சமாச்சாரம் எனக்கெதற்கு சுவாமி ,என்னை பற்றி கூறுங்கள் "என்றான்.
"இன்று இரவு உனக்கு ஒரு ஆபத்து வரப்போகிறது".
"சிவ சிவா !நல்ல வாக்காக ஏதாவது சொல்லக்கூடாதா?"
"புத்தரின் அருளால் அந்த கஷ்டம் நீங்கும்".
"நான் சைவன் ஆயிற்றே!புத்தர் எனக்கு அருள் செய்வாரா?"
"புத்தரின் கருணை எல்லையற்றது ".
"அதோ அங்கே வருவது யார்?"என்று கேட்டான் பரஞ்சோதி.மங்கிய மாலை வெளிச்சத்தில் ஒரு உருவம் வந்துகொண்டிருந்தது தெரிந்தது.
"பார்த்தாலே தெரியவில்லையா?திகம்பர சமண முனிவர் வருகிறார்!"என்றார் சந்நியாசி.
"சமண முனிவர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்களா ?"என்றான் பரஞ்சோதி.
"முக்கால்வாசி பேர் பாண்டிய நாட்டிற்கு போய்விட்டார்கள் மற்றவர்களும் சீக்கிரம் போய்விடுவார்கள்".
சமண முனிவர் அருகில் வந்ததும் புத்த பிக்ஷு "புத்தம் சரணம் கச்சாமி "என்றார்.
சமண முனிவர்,"அருகர் தாள் போற்றி!"என்றார்.
"இருட்டுகிற சமயத்தில் அடிகள் எங்கே பிரயாணமோ?"என்று புத்த பிக்ஷு கேட்டார்.அதற்குச் சமணர்,"ஆகா!இந்த ருத்ர பூமியில் எனக்கு என்ன வேலை?தொண்டை மண்டலந்தான் சடையன் கூத்தாடும் சுடுகாடாகிவிட்டதே,தெரியாதா?நான் பாண்டிய நாட்டிற்கு போகிறேன்"என்றார்.
"இன்றைக்கு முக்கிய விஷேசம் ஏதும் உண்டா?"என்று புத்த பிக்ஷு கேட்க ,சமண முனிவர் ,"விஷேசம் உண்டு.கோட்டை கதவுகளை மூடப் போகிறார்களாம்!"என்று சொல்லிக்கொண்டே விரைந்து சென்றார்.
"ஒரு காலத்தில் சமணர்கள் வைத்ததே சட்டமாயிருந்தது.அவர்கள் கிழித்த கோடு தாண்டாமல் இருந்தார் மகேந்திரர் ஆனால் இப்போது",என்று சொல்லி நிறுத்தினார் பிக்ஷு.
"இப்போது என்ன?"என்று கேட்டான் பரஞ்சோதி.
"இப்போது சைவ வைஷ்ணவர்களின் பாடு இந்த நாட்டில் கொண்டாட்டமாயிருக்கிறது".
"ஓஹோ!"என்றான் வாலிபன்.பிறகு,"ஏதோ கோட்டை கதவு சாத்துவதைப் பற்றி சமண முனிவர் சொன்னாரே அது என்ன?"என்று கேட்டான்.
"அதோ பார்!"என்றார் சந்நியாசி".எதிரே காஞ்சி மாநகரின் தெற்குக் கோட்டை வாசல் தெரிந்தது.கோட்டை வாசலின் பிரமாண்ட கதவு மூடியிருந்தது.
                                                                                                   -தொடரும்.

கல்கியின் "சிவகாமியின் சபதம்"

வணக்கம் உறவுகளே!
                  "சிவகாமியின் சபதம்" இந்த புத்தகமானது அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி 1948 ஆம் ஆண்டு கல்கி வார இதழில் வெளிவந்த புகழ்பெற்ற சரித்திர நாவல். கல்கியின் கற்பனை வளத்தாலும்,கவி நயத்தாலும், கதாபாத்திரங்களின் குணாதிசயங்களும், பல மர்ம முடிச்சுகளாலும், சுவாரஸ்யமாகவும் நம்மை கடந்த காலத்திற்கே கொண்டு செல்கிறார். முதலில் இந்த புத்தகம் பற்றி நிறைய பேர் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அப்போது நான் அறியவில்லை இதன் சிறப்பை, பின்னர் சமீபத்தில் படிக்க நேர்ந்த சமயத்தில் தான் உணர்ந்தேன். படிக்க படிக்க ஆர்வம் மிகவும் அதிகமானது, இப்போது தெரிகிறது இவ்வளவு நாள் இந்த மாதிரியான சரித்திரங்களை படிக்காமல் வீணடித்து விட்டோம். சரி இந்த புத்தகத்தை பற்றி பார்போம்.


கதாபாத்திரங்கள்: மகேந்திர பல்லவர், மாமல்ல நரசிம்ம பல்லவர் இருவரும் முக்கியமான கதாபாத்திரம், தளபதி பரஞ்சோதி, சிவகாமி, ஆயனச் சிற்பி, இலங்கை மானவண்மன், வாதாபி புலிகேசி, நெடுமாற பாண்டியன், மங்கையர்க்கரசி, அப்பர், சம்பந்தர், குலச்சிறையர் ஆகிய பாத்திரங்கள் உண்மையான கதாபாத்திரங்கள் ஏனைய கதாபாத்திரங்கள் கற்பனை.

முன்னுரை : இந்த புத்தகம் 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகேந்திர பல்லவர் மற்றும் அவரது புதல்வன் மாமல்ல நரசிம்ம பல்லவர்களின் கல்வி, வீரம், போர் தந்திரம், ஆட்சிமுறை, கலை, சிற்பங்கள், நடனம், ஓவியம்,மாமல்ல புரத்து குடைவரை கோவில்கள் ,சிற்பங்களை  பற்றி கூறுகிறது.வாதாபி மன்னன் புலிகேசி பெரும் சைனியம் கொண்டு தென்னிந்தியா மீது படையெடுத்து காஞ்சி கோட்டையை முற்றுகை யிட்டு சிவகாமியை சிறை கொண்டு செல்லும் போது சிவகாமி ஒரு சபதம் செய்கிறாள், அந்த சபதம் யாரால், எப்போது நிறைவேறியது என்பதை கதையில் பார்ப்போம். இதன் முதல் அத்தியாயம் அடுத்த பதிவிலிருந்து.. "தமிழின் பெருமையை உரக்கச் சொல்வோம் உலகிற்கு" நன்றி.

அறிமுகம்!

நேயர்களுக்கு வணக்கம்!
         நான் உங்கள் ஞானம் கோவிந்தசாமி இந்த பதிவை நமக்கான அறிமுக பதிவாக கொண்டு எழுதுகிறேன். இந்த பதிவு மற்றும் இதன் பின்னர் வரும் பதிவுகள் தமிழர்களுக்காகவும்,தமிழ் மொழியின் பெருமையை, சிறப்பையும், தன்மையையும் பற்றி இந்த நவீன தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நோக்கம் கொண்டு பதிவிடுகிறேன். நமது தமிழ் நாட்டின் பெருமையை, வீரத்தை இந்த உலகெங்கும் புகழ் பரப்பிய பல மன்னர்கள், வீரர்கள் இம்மண்ணில் வாழ்ந்தனர் அவர்களைப் பற்றியும் அவர்களின் வீரம், ஆளுமை திறன், அறிவியல் சார்ந்த அறிவு போன்ற பல வறலாற்றை அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்.
      ''கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிமக்கள் "என்ற வாக்கியத்தின் படி நம் முன்னோர்கள் சிறப்பாக வாழ்ந்த காலத்தை, நமது வறலாற்றை அறிந்து கொள்வது நமது கடமை. நமது வரலாற்றை நாம் தானே அறிந்து பாரெங்கும் பரப்புவதும் நமது கடமை தானே.
       மற்ற நாட்டு மக்கள் அவர்களின் வறலாற்றை அனைத்து மக்களும் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் இந்த நாட்டில் எத்தனை பேர் அவர்கள் முன்னோர்களின் வரலாற்றை அறிந்து வைத்துள்ளனர். நமது வரலாற்றை பற்றி தெரியாததை விட வேறு அவமானம் இல்லை.
        நமது முன்னோர்கள் பலர் வறலாற்றை சுவடிகளில் குறித்து வைத்துள்ளனர். அவற்றை அறிந்து ஆராய்ச்சி செய்து பல புத்தகங்களை கொடுத்துள்ளனர். வரலாற்றை அறிந்து கொள்ள கலைநயமிக்க,கதையம்சங்களுடன் புதினங்கள் பல உள்ளன.ஆனால் அதை பலர் அறிந்திருக்கவில்லை எனவே அவற்றை அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், நான் படித்த அந்த புதினங்களை கதை வடிவில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
    சரித்திர நாவலின் நாயகன் திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் போன்ற நாவல்கள் சிறந்த வரலாற்று சரித்திர நாவல்கள். இது போன்ற பல ஆசிரியர்கள் பல சரித்திர நாவல்களை இயற்றியுள்ளனர்.இந்த சரித்திரங்களை சாதாரண மக்களும் அறிந்து கொள்ள வேண்டி கதை வடிவில் பதிவு செய்ய விரும்புகிறேன். எனவே எந்தன் முயற்சிக்கு  நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்கிறேன். எனது பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை கருத்துக்கள் மூலம் பதிவிடலாம்.
அடுத்த பதிவில் ஒரு சுவாரஸ்யமான வரலாற்று புதினத்துடன் சந்திப்போம்.
        " தமிழின் பெருமையை உரக்க சொல்வோம் உலகிற்கு ". _ வணக்கம்.

குறைந்த செலவில் நல்ல தரமான ஸ்மார்ட் போன் !!என்ன வாங்கலாம்?

தற்போதைய காலத்தில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது.சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இன்றி அனைவரும் ஸ்மார்ட் போனை கையாளுகின்றனர்.பெரும்பாலும் இளைஞர்களிடம் அதிக மோகம் கொண்டுள்ள ஒரு சாதனமாக உள்ளது,இது அவர்களின் ஒரு முக்கிய அங்கமாக வகிக்கிறது.
ஸ்மார்ட் போன்கள் அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இது அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.அதிக சிறப்பம்சங்களை கொண்ட போன்கள் அநேகமாக அதிகமான விலை கொண்டிருக்கும்,எனவே நல்ல தரமான மற்றும் அதிக சிறப்பம்சங்களை கொண்ட போனை அனைவராலும் வாங்க இயலாது,எனவே குறைந்த விலையில் நல்ல ஸ்மார்ட் போன் பட்டியல் கீழே உள்ளது அதன் சிறப்பம்சங்களுடன் பார்க்கலாம்..

1.Redmi Note 5(Black, 32 GB)  (3 GB RAM)

சியோமி ரெட்மி நோட் 5 மொபைல் ஒரு சைனா நிறுவனத்தின் தயாரிப்பு இது மக்களிடையே அதிக வரவேற்ப்பை கொண்டுள்ளது.தற்போது இந்தியாவிலேயே இதன் தயாரிப்பை தயாரிக்கிறது.ரெட்மி நோட் 5 நல்ல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது அதை பார்க்கலாம்.

விலை :₹9,999

இது 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு திறனிலும் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு திறனிலும் கிடைக்கிறது,மேலும் 128GB வரையிலும் விரிவாக்க சேமிப்பு திறனை கொண்டது.
  • இது Android Nougat 7.1.2 செயலி உடன் Qualcomm Snapdragon 625 Processor கொண்டு செயல்படுகிறது,5.99 inch Full HD திரை உள்ளது,இது 4000 mAh Li Polymer Battery கொண்டுள்ளது அதிக நேரம் பயன்படுத்தலாம்,இது பின் பக்கம் 12MP கேமரா மற்றும் முன்பக்கம் 5MP கேமரா கொண்டுள்ளது இதன் மூலமாக சிறப்பான புகைப்படங்கள் எடுக்கலாம்.இரண்டு சிம் கார்டு பயன்படுத்தலாம்,இது கருப்பு மற்றும் கோல்டன் நிறங்களில் கிடைக்கிறது.குறைந்த விலையில் வாங்க ஏற்ற மொபைல்.

  • 2.Honor 7A (Black, 32 GB)  (3 GB RAM)
  •  
  •      Honor 7A வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனமான இது மக்களிடையே நல்ல வரவேற்பை கொண்டுள்ளது.இந்த மொபைல் ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது.இதன் அம்சங்களை பார்க்கலாம்.
  • இந்த மொபைல் Android Oreo 8.0 இயங்குதளம்  உடன் Qualcomm Snapdragon Octa Core செயலி கொண்டு வெளிவருகிறது.5.7 inch 1440 x 720 Pixels கொண்ட பெரிய திரை உள்ளது.இரண்டு சிம் கார்டு பயன்படுத்தலாம்,மேலும் இது 32GB சேமிப்பு திறன்  3GB RAM கொண்டுள்ளதால் வேகமாக செயல்படும்.இது 256GB வரை சேமிப்பு திறனை MicroSD Card கொண்டு அதிகபடுத்தலாம்.பின்பக்கம் 13MP + 2MP இரட்டை கேமரா,முன்பக்கம் 8.0MP செல்பி கேமரா கொண்டுள்ளதால் சிறப்பான புகைப்படங்கள் எடுக்கலாம் மேலும் Finger Print Sensor கொண்டுள்ளதால் பாதுகாப்பு அதிகம்.இது 3000 mAh
  •  பேட்டரி கொண்டுள்ளது.இது ₹8,999 விலையில் கிடைக்கிறது.குறைந்த விலையில் வாங்க தகுந்த மொபைல். 

     3.Sony Xperia R1 Dual (Silver, 16 GB)  (2 GB RAM)

  •  இது Android Nougat 7 இயங்குதளம் உடன் Qualcomm Snapdragon 430 64-bit Octa Core 2.4 GHz செயலி கொண்டு செயல்படுகிறது.இது 5.2 inch 1280 x 720 Pixels HD TFT 2.5D Curved Glass கொண்ட திரை உள்ளது.இது இரண்டு சிம் கார்டு கொண்டு பயன்படுத்தலாம்.இது 16 GB சேமிப்பு திறன்  2 GB RAMகொண்டுள்ளது மேலும் செமிப்புதிரனை microSDXC கொண்டு 128 GB வரை பயன்படுத்தலாம்.பின் பக்கம் 13MP கேமரா Rear LEDFlash உடனும் முன்பக்கம்  8MP செல்பி கேமரா உடன் வருகிறது இதன் மூலம் அழகான புகைப்படங்கள் எடுக்கலாம்.இது 4G LTE கொண்டுள்ளது.இது 2620 mAh அளவு கொண்ட பேட்டரி உள்ளது.இது ₹9,490 விலையில் கிடைக்கிறது.

  • 4.Redmi 5A (Gold, 32 GB)  (3 GB RAM)

  • இது Android Nougat 7.1.2 இயங்குதளம் கொண்டு Qualcomm Snapdragon
    425 Quad Core 1.4 GHz செயலி கொண்டு செயல்படுகிறது.இது 32 GB வரையலான சேமிப்பு திறன் மற்றும் 3 GB RAM கொண்டுள்ளது இது தடையின்றி செயல்படும்.அதிக மெமரி கொண்ட கேம்ஸ் விளையாடலாம்,வீடியோ பார்க்கலாம் மேலும் இது 128 GB வரையிலான Expandable Storage கொண்டுள்ளது.இது பின்பக்கம் 13MP Rear Flash உள்ள கேமரா உள்ளது,முன்பக்கம் 5MP செல்பி கேமரா உள்ளது இதன் மூலமாக சிறப்பான படங்களை எடுக்கலாம்.இது 4G, 4G VOLTE, 2G, 3G Dual Nano SIM உள்ளது மேலும் இது 3000 mAh அளவு கொண்ட பேட்டரி உள்ளதால் அதிக நேரம் பயன்படுத்தலாம்.ரெட்மி மொபைல் 5 inch 1280 x 720 Pixels கொண்ட HD திரை உள்ளதால் பெரிய வீடியோக்களை பார்க்கலாம்.இது  ₹6,999 விலையில் கிடைக்கிறது.குறைந்த விலையில் வாங்க ஏற்ற ஸ்மார்ட் போன்.
  •  






எதிர்கால மின்னணு உதிரிபாகங்கள் செய்திதாளைபோல் அச்சிடப்படும் !!

ஒரு புதிய உற்பத்தி நுட்பம் செய்திதாள் அச்சிடளுடன் புதிய முறையை பயன்படுத்துகிறது,மேலும் இது அதிவேகமான மின்னணு சாதனங்களை தயாரிக்க மென்மையான மற்றும் நெகிழ்வான உலோகங்களை உருவாக்குகிறது.
PURDUE UNIVERSITY ஆய்வாளர்கள் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் முறையில் ஒரு புதிய நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.இந்த நுட்பத்தை ஏற்கனவே உள்ள கருவிகளுடன் இணைத்துள்ளனர்.
இதன் மூலம் குறைந்த செலவில் பெரிய அளவிலான உலோகங்களை உற்பத்தி செய்யலாம்.ஏற்கனேவே உள்ள முறையானது அதிகமான உராய்வை ஏற்படுத்தி அதன் மேல் பரப்பில் உலோக துகள்கள் படிகின்றன.
எனவே இதை கட்டுபடுத்த Roll-to-Roll  செய்திதாள் அச்சிடல் முறையில் செய்யபடுகிறது.இன்றைய காலகட்டத்தில் மின்னலை விட வேகமாக மின்னணு பொருட்களை மிக துல்லியமாகவும் ,வேகமாவும் தயாரிக்க Roll-to-Roll Newspaper Printing முறையை கண்டறிந்துள்ளனர்.
செல்போன்கள், மடிக்கணினிகள், கையடக்க கணினிகள் மற்றும் பல மின்னணு சாதனங்கள் ஆகியவை அவற்றின் உள் உலோக வட்டங்களில் அதிக வேகத்தில் தகவல்களைச் செயலாக்குகின்றன.தற்போதைய   உலோக உராய்வு நுட்பத்தில்,திரவ வடிவ உலோக துளிகளை  ஒரு சுற்று வடிவிலான ஸ்டென்சில் மாஸ்க் வழியாக செலுத்தி பெறப்படுகிறது.சுவற்றில் க்ராப்பிட்தெளிப்பதை போல செயல்படுகிறது.

"துரதிர்ஷ்டவசமாக இந்த உராய்வு நுட்பம் கடினமான மேற்பரப்புகளுடன் உலோக சுற்றுக்களை உருவாக்குகிறது,இதனால் எலக்ட்ரானிக் சாதனங்களை அதிகமாக வெப்பமாகிறது மற்றும் மிக வேகமாக பேட்டரியை செயலிழக்கச் செய்கிறது.",என்று தொழில்துறை பொறியியல் மற்றும் உயிரியல் பொறியியல் பொறியியலின் துணை பேராசிரியர் ரம்சேஸ் மார்டினெஸ் தெரிவித்தார்.
எதிர்கால அல்ட்ரா பாஸ்ட் மின்னணு சாதனங்களுக்கு கூட சிறிய அளவிலான மூலக்கூறுகள் தேவைப்படும்,அவைகள் நானோ ஸ்கேல் மூலமாக தயாரிக்கபடுகிறது.
பெருமளவில் சிறிய வடிவங்களுடன் உலோகங்களை உருவாக்குவது உயர்ந்த மற்றும் உயர் வரையறை கொண்ட அச்சுப்பொறிகளுக்கு தேவைப்படுகிறது, நீங்கள் நானோ அளவிலான அளவை எட்டும் வரை," மார்டினெஸ் கூறினார்.
"பெருமளவில் சிறிய வடிவங்களுடன் உலோகங்களை உருவாக்குவது உயர்ந்த மற்றும் உயர் வரையறை கொண்ட அச்சுப்பொறிகளுக்கு தேவைப்படுகிறது, நீங்கள் நானோ அளவிலான அளவை எட்டும் வரை," மார்டினெஸ் கூறினார். "நானோ தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்களைச் சேர்ப்பது நமக்கு தேவைப்படும் தானியங்களை விட சிறிய அளவிலான உருவங்களை மாதிரியாக மாற்றியமைக்க வேண்டும், இது ஒரு மணல் தானியத்தைக் காட்டிலும் சிறிய மணல் கோட்டை போன்றது."
வழக்கமான கார்பன் டை ஆக்சைடு லேசர்கள் மூலம் நானோஸ்கோலில் மென்மையான மெட்டல் சர்க்யூட்ஸை உருவாக்கும் ஒரு புதிய பெரிய அளவிலான கட்டுப்பாட்டு முறையுடன் இந்த இரண்டையும் - கடினத்தன்மை மற்றும் குறைந்த தெளிவுத்திறன் ஆகிய இரண்டையும் பர்டு ஆராய்ச்சியாளர்கள் உரையாற்றினர், இது ஏற்கனவே தொழில்துறை வெட்டு மற்றும் செதுக்கலுக்கு பொதுவானது .

"பத்திரிகைகள் போன்ற சிறிய உலோகப் பொருள்களை அச்சிடுவதால் அவை மிகவும் மென்மையாகின்றன, இது ஒரு மின்னோட்டத்தை வெப்பமடைவதைக் குறைக்கும் ஆபத்துடன் பயணிக்க அனுமதிக்கிறது," மார்டினெஸ் கூறினார்.

ரோல்-டூ-ரோல் லேசர்-தூண்டப்பட்ட சூப்பர்பிளாஸ்டிட்டி என்றழைக்கப்படும் கற்பனை முறை, அதிக வேகத்தில் பத்திரிகைகளை அச்சிட பயன்படுத்தப்படும் ஒரு உருளை முத்திரை பயன்படுத்துகிறது. இந்த நுட்பம் சுருக்கமான காலத்திற்கு, உயர்-ஆற்றல் லேசர் காட்சிகளைப் பயன்படுத்துவதன் மூலம் வேறுபட்ட உலோகங்களுக்கு "சூப்பர்ரெலஸ்டிஸ்ட்" நடத்தையைத் தூண்டலாம், இது உலோகத்தை உருளும் ஸ்டாப்பின் நானோஸ்கேல் அம்சங்களுக்குள் நுழைவதற்கு உதவுகிறது.

"எதிர்காலத்தில், எங்கள் நுட்பத்தை பயன்படுத்தி சாதனங்களின் ரோல்-க்கு-ரோல் இட்டுச்செல்லுதல், ஒளி மூலம் தொடர்புகொள்வதற்கும், 3D உருவங்களை உருவாக்கும் திறனுடன் கூடிய திறனுடன் கூடிய தொடு திரைகள் உருவாவதற்கும், மேலும் முக்கியமான உயிரியலாளர்களின் செலவின உத்தியாகும், "மார்டினெஸ் கூறினார்.
Please like and share.
Source:www.sciencedaily.com