வணக்கம் உறவுகளே!
"சிவகாமியின் சபதம்" இந்த புத்தகமானது அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி 1948 ஆம் ஆண்டு கல்கி வார இதழில் வெளிவந்த புகழ்பெற்ற சரித்திர நாவல். கல்கியின் கற்பனை வளத்தாலும்,கவி நயத்தாலும், கதாபாத்திரங்களின் குணாதிசயங்களும், பல மர்ம முடிச்சுகளாலும், சுவாரஸ்யமாகவும் நம்மை கடந்த காலத்திற்கே கொண்டு செல்கிறார். முதலில் இந்த புத்தகம் பற்றி நிறைய பேர் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அப்போது நான் அறியவில்லை இதன் சிறப்பை, பின்னர் சமீபத்தில் படிக்க நேர்ந்த சமயத்தில் தான் உணர்ந்தேன். படிக்க படிக்க ஆர்வம் மிகவும் அதிகமானது, இப்போது தெரிகிறது இவ்வளவு நாள் இந்த மாதிரியான சரித்திரங்களை படிக்காமல் வீணடித்து விட்டோம். சரி இந்த புத்தகத்தை பற்றி பார்போம்.

கதாபாத்திரங்கள்: மகேந்திர பல்லவர், மாமல்ல நரசிம்ம பல்லவர் இருவரும் முக்கியமான கதாபாத்திரம், தளபதி பரஞ்சோதி, சிவகாமி, ஆயனச் சிற்பி, இலங்கை மானவண்மன், வாதாபி புலிகேசி, நெடுமாற பாண்டியன், மங்கையர்க்கரசி, அப்பர், சம்பந்தர், குலச்சிறையர் ஆகிய பாத்திரங்கள் உண்மையான கதாபாத்திரங்கள் ஏனைய கதாபாத்திரங்கள் கற்பனை.
முன்னுரை : இந்த புத்தகம் 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகேந்திர பல்லவர் மற்றும் அவரது புதல்வன் மாமல்ல நரசிம்ம பல்லவர்களின் கல்வி, வீரம், போர் தந்திரம், ஆட்சிமுறை, கலை, சிற்பங்கள், நடனம், ஓவியம்,மாமல்ல புரத்து குடைவரை கோவில்கள் ,சிற்பங்களை பற்றி கூறுகிறது.வாதாபி மன்னன் புலிகேசி பெரும் சைனியம் கொண்டு தென்னிந்தியா மீது படையெடுத்து காஞ்சி கோட்டையை முற்றுகை யிட்டு சிவகாமியை சிறை கொண்டு செல்லும் போது சிவகாமி ஒரு சபதம் செய்கிறாள், அந்த சபதம் யாரால், எப்போது நிறைவேறியது என்பதை கதையில் பார்ப்போம். இதன் முதல் அத்தியாயம் அடுத்த பதிவிலிருந்து.. "தமிழின் பெருமையை உரக்கச் சொல்வோம் உலகிற்கு" நன்றி.

No comments:
Post a Comment