அத்தியாயம் :1 _ பிரயாணிகள்
இளவேனிற் காலத்தில் ஒரு நாள் மாலையில் மகேந்திர ஏரிக்கரை வழியாக போகிற சாலையில் இருவர் காஞ்சி நகரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.அவர்களில் ஒருவர் ஆறடி உயரத்துக்கு மேல் வளர்ந்திருந்த ஆஜானுபாகு ,காவி வஸ்திரம் தரித்த பௌத்த சந்நியாசி.கடுமையான தவ விரதங்களினாலோ,வேறு கடினமான காரியங்களில் ஈடுபட்டத்தினாலோ அந்த புத்த பிக்ஷுவின் தேகமானது வறண்டு கெட்டிப்பட்டுக் கடினமாயிருந்தது.அவரின் முகத்தோற்றமானது அன்பையோ பக்தியையோ உண்டாக்குவதில்லை,மாறாக ஒருவித பயத்தை ஊட்டியது.
இன்னொரு பயணி கட்டமைத்த தேகமும்,காலை பொருந்திய முகமும் உடைய பதினெட்டு வயது வாலிபன்.பயணிகள் இருவரும் வெகுதூரம் நடந்த களைப்பில் இருந்தனர்.
"தலைநகரம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது?" என்று வாலிபன் கேட்டான்.
"அதோ!" என்று பிக்ஷு கை காட்டிய பக்கம்,அடர்ந்த மரங்களுக்கு நடுவே மாளிகைகளின் கோபுரம் தெரிந்தது.அந்த வாலிபன் அதையே சற்று நேரம் பார்த்துகொண்டிருந்தான்.பின்னர் புத்த பிக்ஷுவை பார்த்து "இங்கிருந்து ஒரு நாழிகை தூரம் இருக்குமா?"என்று கேட்டான்.
"அவ்வளவு தான் இருக்கும் ".
"அப்படினா நான் சற்று உட்கார்ந்து விட்டு வருகிறேன்.அவசரமானால் நீங்க போங்க"என்று சொல்லி வாலிபன் கையிலிருந்த முட்டையையும் தடியையும் கீழே வைத்துவிட்டு ஏரியை பார்த்துக்கொண்டு உட்கார்ந்தான்.
பிக்ஷுவும் அவன் அருகில் மேற்கு திசையை பார்த்து உட்கார்ந்தார்.
அந்த ஏரியின் அழகையும்,பொன்வானம் நெருப்பை உமிழ்வது போன்ற நிறம் கொண்டு காட்சியளிக்கிறது,அங்கே மீனுக்காக தவம் செய்துகொண்டிருக்கும் வெண் நாரைகள்,எழில்மிகு மலைகளின் அழகையும் பார்த்து ரசித்தவாறு அந்த வாலிபன் மௌனமாக இருக்கிறான்.பின் தனக்கு தானே பேசிக்கொள்வது போல் "இந்த பிரமாண்ட ஏரியை மகேந்திர தடாகம் என்று சொல்வது பொருத்தம் இல்லை,மகேந்திர சமுத்திரம் என்று தான் இதை சொல்லவேண்டும்!"என்றான்.
சந்நியாசி ஏரியை நோக்கிய வண்ணம் ,"இந்த ஏரியில் இப்போது நீர் குறைவு.ஐப்பசி கார்த்திகையில் மழை பெய்து ஏரி நிரம்பியிருக்கும் போது பார்த்தால் அசந்து போவாய் !அப்போது நிஜ சமுத்திரம் போலவே இருக்கும்"என்று சொல்லிக்கொண்டு எழுந்தார்.
"புறப்பட்டு விட்டீர்களா சுவாமி ?"என்றான் வாலிபன்.
"ஆமாம் பரஞ்சோதி !என்னோடு வருவதற்கு உனக்கு இஷ்டம் இல்லை போல"என்று சொல்லிவிட்டு சந்நியாசி நடக்க தொடங்கினார்.
பரஞ்சோதியும் அவரை தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.சாலையில் போவோர் வருவோர் கூட்டம் அதிகமாயிருந்தது.சற்று தூரம் சென்றதும் மல்லிகை பூக்களின் வாசம் வந்தது.அதை நுகர்ந்ததும் "ஆஹா!"என்றான் வாலிபன்.அங்கே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நந்தவன பூக்கள் பூத்துச் சிரித்துக்கொண்டிருந்தன.
"இவ்வளவு பூக்களை என்னதான் செய்வார்கள் ?"என்று வாலிபன் கேட்டான்.
"இவற்றில் பாதி கோயில் தெய்வங்களுக்கு அர்ப்பணமாகும் ,மற்ற பாதி காஞ்சி நகரத்து பெண்களை அலங்கரிக்கும் ...அதோ!"என்று சட்டென்று நின்றார் சந்நியாசி.சர சரவென்று பாம்பு சாலையை கடந்தது."இந்த மல்லிகை மணத்திற்கு பாம்புகள் எங்கே என்று காத்திருக்கும்"என்றார் சந்நியாசி.
பாம்பு போனதும் மேலே நடந்தார்கள் மௌனமாக.பரஞ்சோதி சட்டென்று சிரித்தான்."எதை நினைத்து சிரிக்கிறாய்?"என்கிறார் சந்நியாசி.
பரஞ்சோதி சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு,"இல்லை அடிகளே!மத்தியானம் அந்தச் சர்பத்தை கொன்று என்னை காப்பாற்றினீர்களே?நீங்கள் புத்த பிக்ஷுவாயிற்றே ?ஜீவஹத்தி செய்யலாமா என்று நினைத்து சிரித்தேன் !"என்றான்.
"தன்னை கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம் அல்லவா?"என்றார் புத்த பிக்ஷு."ஆனால் பாம்பு தங்களை கொல்ல வரவில்லையே?என்னைத்தானே கொல்ல வந்தது?"என்றான் பரஞ்சோதி.
"என் சிஷ்யனை நான் காப்பாற்ற வேண்டாமா?"என்றார் பிக்ஷு.
"சிஷ்யனா ? யாரை சொன்னீர்கள் ?
"ஆமாம்,நீ என் உயிரை ஒரு சமயம் காப்பாற்றினாய்,அதற்கு பிரதியாக...
"உங்கள் உயிரை நான் காப்பாற்றினேனா! எப்போது ?
"முன்னூறு வருஷத்துக்கு முன்பு...
"என்ன!
"முன்னொரு ஜென்மத்தில்.
"ஓஹோ!தாங்கள் முக்காலமும் உணர்ந்த முனிவர் என்பது தெரியாமல் கேட்டுவிட்டேன் ,மன்னிக்க வேண்டும்.என்றான் வாலிபன்.சந்நியாசி மௌனமாக நடந்தார்.
மீண்டும் பரஞ்சோதி,"சுவாமி!இனி வரப்போகிறது கூட தங்கள் ஞான திருஷ்டியில் தெருமல்லவா?"என்று கேட்டான்."வரப்போகிறது ஒன்றை சொல்லட்டுமா?"என்றார் பிக்ஷு.வாலிபன் "சொல்லுங்கள் ".
"இந்த நாட்டுக்கு பெரிய யுத்தம் வரப்போகிறது!"
"பெரிய யுத்தமா?"
"ஆமாம் மகா பயங்கரமான யுத்தம் ,பாலாறு இரத்த ஆறாக ஓடப்போகிறது,மகேந்திர தடாகம் இரத்த தடகமாக மாறப்போகிறது".
"ஐயோ !பயமாயிருக்கிறது!போதும் அடிகளே!"சற்று பொறுத்து மீண்டும் பரஞ்சோதி "நாட்டின் சமாச்சாரம் எனக்கெதற்கு சுவாமி ,என்னை பற்றி கூறுங்கள் "என்றான்.
"இன்று இரவு உனக்கு ஒரு ஆபத்து வரப்போகிறது".
"சிவ சிவா !நல்ல வாக்காக ஏதாவது சொல்லக்கூடாதா?"
"புத்தரின் அருளால் அந்த கஷ்டம் நீங்கும்".
"நான் சைவன் ஆயிற்றே!புத்தர் எனக்கு அருள் செய்வாரா?"
"புத்தரின் கருணை எல்லையற்றது ".
"அதோ அங்கே வருவது யார்?"என்று கேட்டான் பரஞ்சோதி.மங்கிய மாலை வெளிச்சத்தில் ஒரு உருவம் வந்துகொண்டிருந்தது தெரிந்தது.
"பார்த்தாலே தெரியவில்லையா?திகம்பர சமண முனிவர் வருகிறார்!"என்றார் சந்நியாசி.
"சமண முனிவர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்களா ?"என்றான் பரஞ்சோதி.
"முக்கால்வாசி பேர் பாண்டிய நாட்டிற்கு போய்விட்டார்கள் மற்றவர்களும் சீக்கிரம் போய்விடுவார்கள்".
சமண முனிவர் அருகில் வந்ததும் புத்த பிக்ஷு "புத்தம் சரணம் கச்சாமி "என்றார்.
சமண முனிவர்,"அருகர் தாள் போற்றி!"என்றார்.
"இருட்டுகிற சமயத்தில் அடிகள் எங்கே பிரயாணமோ?"என்று புத்த பிக்ஷு கேட்டார்.அதற்குச் சமணர்,"ஆகா!இந்த ருத்ர பூமியில் எனக்கு என்ன வேலை?தொண்டை மண்டலந்தான் சடையன் கூத்தாடும் சுடுகாடாகிவிட்டதே,தெரியாதா?நான் பாண்டிய நாட்டிற்கு போகிறேன்"என்றார்.
"இன்றைக்கு முக்கிய விஷேசம் ஏதும் உண்டா?"என்று புத்த பிக்ஷு கேட்க ,சமண முனிவர் ,"விஷேசம் உண்டு.கோட்டை கதவுகளை மூடப் போகிறார்களாம்!"என்று சொல்லிக்கொண்டே விரைந்து சென்றார்.
"ஒரு காலத்தில் சமணர்கள் வைத்ததே சட்டமாயிருந்தது.அவர்கள் கிழித்த கோடு தாண்டாமல் இருந்தார் மகேந்திரர் ஆனால் இப்போது",என்று சொல்லி நிறுத்தினார் பிக்ஷு.
"இப்போது என்ன?"என்று கேட்டான் பரஞ்சோதி.
"இப்போது சைவ வைஷ்ணவர்களின் பாடு இந்த நாட்டில் கொண்டாட்டமாயிருக்கிறது".
"ஓஹோ!"என்றான் வாலிபன்.பிறகு,"ஏதோ கோட்டை கதவு சாத்துவதைப் பற்றி சமண முனிவர் சொன்னாரே அது என்ன?"என்று கேட்டான்.
"அதோ பார்!"என்றார் சந்நியாசி".எதிரே காஞ்சி மாநகரின் தெற்குக் கோட்டை வாசல் தெரிந்தது.கோட்டை வாசலின் பிரமாண்ட கதவு மூடியிருந்தது.
-தொடரும்.